என்ன தொட்ட நீ கெட்ட!! அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க மிரட்டல்
ஈரானை தொட நினைத்தால் அமெரிக்கா வைத்திருக்கும் அனைத்தையும் அழித்து விடுவோம் என்று ஈரான் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்று கூறி வந்த நிலையில் கடந்த மே மாதம் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக டிரம்ப் அறிவித்தார்.
மேலும் ஈராக் மீது பல பொருளாதார தடைகளை விதித்ததோடு, அந்நாட்டிடம் இருந்து அமெரிக்க நட்பு நாடுகள் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்றும், அதனை நிறுத்திக்கொள்ளவும் நவம்பர் மாதம் வரை காலக்கெடு விதித்துள்ளார்.
இந்நிலையில், ஈரான் அதிபர் ஹஸன் ரவுஹானி, ஈரானுடன் போரிட அமெரிக்கா நினைத்தால் அது இதுவரை இல்லாத அளவு மிக மோசமான போராக மாறும் என எச்சரித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக டிரம்ப், அமெரிக்காவை அச்சுறுத்த நினைத்தால், ஈரான் இதுவரை கண்டிராத பேரழிவை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார். இதனால் இரு நாட்டின் அதிபர்களுக்கு இடையேயான சண்டை அதிகப்படியானது.
இந்நிலையில் டிரம்ப்பின் கருத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரானை தொட நினைத்தால் அமெரிக்காவிடம் இருக்கும் அனைத்தையும் அழித்து விடுவோம் என ஈரான் சிறப்பு படை கமாண்டோ காசிம் சோலிமனி பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.