1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 24 ஜூலை 2018 (15:33 IST)

தடை நீக்கப்படுமா? ஏவுகணை சோதனை மையத்தை அழித்த வடகொரியா!

வடகொரியா அணு ஆயுத சோதனைகளில் ஈடுப்பட்டு வந்ததால், கொரியா தீபகற்பத்தில் போர் பதற்றம் ஏற்பட்டது. அதோடு, அமெரிக்கா உள்ளிட்ட சில உலக நாடுகலின் எதிர்ப்பையும் சம்பாதித்தது. இதன் விளைவாக வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது. 
 
அனால், தென் கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு பின்னர் வடகொரியா - தென் கொரியா இடையே அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. அதனை தொடர்ந்து அமெரிக்க அதிபருடன் பேச்சு வார்த்தை நடந்தது. 
 
அப்போது இருநாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில், வடகொரியாவில் உள்ள அணு ஆயுதங்கள் அனைத்தையும் அழித்து விடுவதாக கிம் ஒப்புதல் அளித்தார். 
 
ஆனால், அணு ஆயுதங்களை முழுமையாக அழித்த பின்னரே விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகளை நீக்க முடியாது என அமெரிக்கா தெரிவித்தது. இந்நிலையில், வடகொரியா சோகே என்னும் இடத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தை அழிக்கும் நடவடிக்கையை தொடங்கிவிட்டது.

இதற்கான சேட்டிலைட் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. இங்குதான் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தயாரிப்பும், அணு ஆயுத சோதனையும் நடைபெரும் என்பது குறிப்பிடத்தக்கது.