வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 24 ஜூலை 2018 (22:18 IST)

ராகுல்காந்தி என்னை கட்டிப்பிடித்தால்? உபி முதல்வர் யோகி எச்சரிக்கை

பிரதமர் மோடியை கட்டிப்பிடித்தது போல் என்னை ராகுல்காந்தி கட்டிப்பிடிக்க 10 தடவை யோசிக்க வேண்டும் என்று உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
 
கடந்த வாரம் பாராளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னர் நடந்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடியையும், பாஜக அரசையும் கடுமையாக விமர்சனம் செய்தார். பின்னர் திடீரென மோடி அருகில் சென்று அவரை கட்டிப்பிடித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
இந்த நிலையில் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு இதுகுறித்து பேட்டியளித்த உபி முதல்வர் யோகி, 'ராகுல் காந்தி, மோடியை கட்டிப் பிடித்தது வெறும் அரசியல் நோக்கத்திற்காகவே. இதுபோன்ற சம்பவத்தை நானாக இருந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ராகுல் காந்தியின் இந்த செயல்பாடு குழந்தைத்தனமானது. சொந்தமாக முடிவு எடுக்கும் அறிவு அவருக்கு கிடையாது. எந்த ஒரு புத்தியுள்ள மனிதனும் பிரதமரைக் கட்டிப்பிடித்திருக்க மாட்டான். பிரதமரை கட்டிப்பிடித்தது போல் ராகுல் காந்தி என்னை கட்டிப்பிடிப்பதற்கு முன்னர் 10 தடவை யோசிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.