1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 25 ஜூலை 2018 (08:39 IST)

படியில் தொங்கினால் சிறை: ரயில்வே ஆணையர் கடும் எச்சரிக்கை

ரயில் படியில் தொங்கியபடி பயணம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என ரயில்வே பாதுகாப்புப்படை ஆணையர் எச்சரித்துள்ளார்.
நேற்று சென்னை கோடம்பாக்கத்தில் மின்சார ரயில் கம்பி அறுந்து விழுந்ததால் மின்சார ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயில் பாதையில் மாற்றி விடப்பட்டது. இதனால் சென்னை பீச் - தாம்பரம் வழித்தடங்களில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
 
இந்நிலையில் சென்னை பீச் ஸ்டேஷனிலிருந்து அதிக பயணிகளுடன் திருமால்பூருக்கு சென்று கொண்டிருந்த ரயில், பரங்கிமலையை நெருங்கிய போது, படிகட்டில் தொங்கிய 10 மாணவர்கள் பக்கவாட்டில் மோதி கீழே விழுந்தனர். அதில் 4 பேர் சம்பவ இடத்திலே பலியாகினர்.  படுகாயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் நாடெங்கும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பயணிகள் படியில் தொங்கியபடி பயணம் செய்ததாலேயே விபத்து நடந்ததாக ரெயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
 
இந்நிலையில் இதுகுறித்து பேசிய ரயில்வே பாதுகாப்புப்படை ஆணையர்  லூயில் அமுதன், இனி புறநகர் ரயிலில் தொங்கியபடி பயணம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் எச்சரித்துள்ளார்.