ரஜினியை வைத்து விளம்பரம் தேடாதீர்கள் - நீதிமன்றம் எச்சரிக்கை
நடிகர் ரஜினிகாந்த்திற்கு எதிராக பைனான்சியர் போத்ரா தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இயக்குனரும் ரஜினியின் சம்மந்தியுமான கஸ்தூரிராஜா, தன்னிடம் 65 லட்சம் கடன் பெற்றதாகவும், இதற்கு உத்தரவாதமாய் ரஜினி இருந்ததாகவும், கஸ்தூரிராஜா கொடுத்த செக் அனைத்தும் பவுன்ஸ் ஆனதாகவும் பைனான்சிரியர் போத்ரா கூறினார். மேலும் போத்ரா ரஜினி மீது வழக்கு தொடர்ந்தார்.
இதுகுறித்து ரஜினி பேசுகையில் போத்ரா தன்னிடம் பணம் பறிக்கும் எண்ணத்துடன் வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வீண் விளம்பரத்திற்காகவே போத்ரா வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறியுள்ளது. இதுபோன்ற வழக்குகளை ஆரம்பத்திலேயே தூக்கி எறிய வேண்டும் எனக்கூறி போத்ராவிற்கு 25 ஆயிரம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்தது.