1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 8 மார்ச் 2022 (19:03 IST)

உக்ரைன் ராணுவப்படையில் இந்தியர்கள்: அதிர்ச்சி தகவல்!

உக்ரைன் ராணுவத்தில் இந்தியர்கள் உள்பட பல வெளிநாட்டினர் ரஷ்யாவுக்கு எதிரான போரில் கலந்து கொண்டுள்ளனர் என்று உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் இந்தப் போரில் ரஷ்யாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த உக்ரைன் குடிமக்கள் முன்வரவேண்டும் என்று உக்ரைன் அதிபர் தெரிவித்திருந்தார்
 
அவரது வேண்டுகோளை ஏற்று உக்ரைனை சேர்ந்த பலர் இராணுவத்தில் இணைந்து உள்ளனர். அதுமட்டுமின்றி உக்ரைனில் வாழ்ந்து வரும் இந்தியர்கள் உள்பட பலரும் உக்ரைன் இராணுவத்தில் இணைந்துள்ளனர். 
 
இந்தியா அமெரிக்கா பிரிட்டன் ஸ்வீடன் லிதுவேனியா மெக்ஸிகோ போன்ற நாடுகளை சேர்ந்தவர்களும் தன்னார்வத் தொண்டர்களும் தங்கள் நாட்டின் ராணுவத்தில் இணைந்து உள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது