1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 8 மார்ச் 2022 (17:25 IST)

இந்திய கொடியை பயன்படுத்தி உக்ரைனில் இருந்து தப்பிய அண்டை நாட்டினர்!

கடந்த மாதம் 24 ஆம் தேதி ரஷ்ய அதிபர் புதின் உத்தேரைன் ரஷ்ய படைகள் உக்ரைன் மீது போர் தொடுத்தது.

இது உலக நாடுகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  சிறிய நாடாக உக்ரைனுக்கு  நேட்டோ நாடுகளும், மேற்கத்திய நாடுகள் உதவின. இதற்கு ரஷ்யா எதிர்ப்புத் தெரிவித்த  நிலையில், 

நேற்று மனிதாபிமானத்தின் அடிப்படையில் போரை நிறுத்துவதாக ரஷ்ய அதிபர் அறிவித்தார்.

இந்நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவிகளை மீட்க மத்திய அரசு விரைந்து  நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஏற்கனவே  பாகிஸ்தான் நாட்டு மக்கள் உக்ரைனில்  இருந்து தங்கள் சொந்த நாட்டிற்குச் செல்வதற்காக இந்தியாவின் கொடியைப் பயன்படுத்திய நிலையில், தற்போது, இலங்கை, நேபாளம்    மற்றும் வங்கதேச நாட்டு மக்களும் இந்தியாவின் கொடியைப் பயன்படுத்தி தப்பி வருவதாக தகவல்கள் வெளியாகிறது. இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.