சி.எம் ஆனாதான் கிராமத்துக்கு வருவார்!. அதுவரை சிட்டிலதான் இருப்பார்!. விஜயை விளாசும் பிரபலம்!..
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை இரண்டு வருடங்களுக்கு முன்பு துவங்கி அரசியலுக்கு வந்தார். அரசியலுக்கு வந்தது முதலே திமுக மட்டுமே தனது எதிரியாக நினைத்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அதிமுக, பாஜக பற்றி அவர் அதிகம் பேசுவதில்லை.
இது தொடர்பான விமர்சனங்களுக்கு பதில் சொன்ன விஜய் நடக்கப்போவது சட்டமன்றத் தேர்தல்.. ஆட்சியில் இருப்பது திமுக.. எனவே நாங்கள் அவர்களைப் பற்றி மட்டும்தான் பேசுவோம்.. மற்ற கட்சிகளை நேரம் வரும்போது மட்டுமே விமர்சிப்போம். எங்களின் நேரத்தையும், சக்தியையும் நாங்கள் வீணடிக்க முடியாது என புது விளக்கம் அளித்தார்.
மேலும் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து தவெக பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் விஜய் பேசியிருந்தார். இந்நிலையில், இன்று காலை வேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு பேசினார்.. வழக்கம் போல் திமுகவை மிகவும் கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது தவெக ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் வந்து நான் மக்களை சந்திப்பேன் என விஜய் கூறினார்..
இந்த செய்தியை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பிரபல சினிமா விமர்சகர் புளூசட்டமாறன் கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்தித்து களப்பணி செய்து ஆட்சியைப் பிடிப்பது பழைய பாணி.. நீங்கள் என்னை முதல்வராக்கினால் கிராமத்திற்கு தரிசனம் தருவேன் என்று சொல்வது இவரின் பாணி.. அதுவரை நகரங்களில் மட்டுமே விஜயை பார்க்க முடியும் என நக்கலடித்திருக்கிறார்.