செவ்வாய், 6 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 8 மார்ச் 2022 (19:31 IST)

உக்ரைனில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு !

உக்ரைனில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு !
உக்ரைனில் இருந்து மக்கள் வெளியேற போர் மனிதாபிமான அடிப்படையில் போரை  நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ள நிலையில் இதை இந்தியர்கள் பயன்படுத்திக்கொள்ள  வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் 24 ஆம் தேதி ரஷ்ய அதிபர் புதின் உத்தேரைன் ரஷ்ய படைகள் உக்ரைன் மீது போர் தொடுத்தது.

இது உலக நாடுகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  சிறிய நாடாக உக்ரைனுக்கு  நேட்டோ நாடுகளும், மேற்கத்திய நாடுகள் உதவின.இதற்கு ரஷ்யா எதிர்ப்புத் தெரிவித்த  நிலையில், 

நேற்று மனிதாபிமானத்தின் அடிப்படையில் போரை நிறுத்துவதாக ரஷ்ய அதிபர் அறிவித்தார்.

இந்நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்க மத்திய அரசு விரைந்து  நடவடிக்கை எடுத்து வருகிறது. இ ந் நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள சிக்கியுள்ள அனைவரும் உடனடியாக  வெளியேறும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

மனிதாபிமான அடிப்படையில் வெளியேற கொடுக்கப்பட்டுள்ள அவகாசத்தை உக்ரைனில் உள்ள  இந்தியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், விரைவில் ரயில் அல்லது ஏதேனும் ஒரு போக்குவரத்து சேவையைப் பயன்படுத்தி உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேற அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.