திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 8 மார்ச் 2022 (15:55 IST)

அமைச்சரின் மகள் காதல் திருமணம்…பாதுகாப்பு கேட்டு கதறல்…

தமிழ் நாட்டு அமைச்சர் சேகர் பாபுவின் மகள்  ஜெயக்கல்யாணி  தனக்கும் தனது கணவருக்கும் பாதுகாப்பு வழங்கக்ககோரி பெங்களூர் காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. இவரது அமைச்சரவையில்,  தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைசராகப் பதவி வகித்து வருபவர் சேகர் பாபு.

இவரது மகள் ஜெயகல்யாணி காதல் திருமணம் செய்துகொண்டார். எனவே தனக்கும் தனது கணவருக்கும் பாதுகாப்பு வழங்கவேண்டுமென ஒரு வீடியூ வெளியிட்டுள்ளார்.

அதில், ''நானும் என் கணவரும் 6 ஆண்டுகளாகக் காதலித்து வருகிறோம். இரண்டுபேரின் விருப்பத்தின்படி தற்போது திருமணம் செய்துகொண்டோம். எனவே எனது கணவர் மற்றூம் அவரது  குடும்பத்தாரை யாரும் தொந்தரவவு செய்ய வேண்டாம். தமிழ் நாடு போலீஸார் எனக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும்'' என கேட்டுக்கொண்டுள்ளார்.