செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 8 மார்ச் 2022 (17:02 IST)

உலக மகளிர் தினம் - அதிமுக தலைமை அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடிய இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்

இன்று உலக முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகளிர் தினத்திற்கு அரசியல் கட்சித்  தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை ராயபுரத்திலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

அப்போது, அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செலவம் ,  துணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் பெண் கட்சி நிர்வாகிகளுக்கு கேக் ஊட்டிவிட்டனர். இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

சமீபத்தில்,  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியால், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது தம்பி ஓ.ராஜா  இருவரும் சசிகலாவை சந்தித்ததாக கூறப்பட்ட நிலையில், இன்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும்  பன்னீர்செல்வமும் இணைந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.