மூன்று நாள்களில் முடிந்தது முதல் டெஸ்ட் –இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

kohli and co
Last Modified சனி, 6 அக்டோபர் 2018 (15:05 IST)
ராஜ்கோட்டில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸுக்கு எத்ரான் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 276 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 649 ரன்கள் டிக்ளேர் செய்தது. இந்தியா சார்பாக கோலி, பிருத்வி ஷா மற்றும் ரவிந்திர ஜடேஜா சதம் அடித்து அசத்தினர்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் மூன்றாம நாளான இன்று காலை 181 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 468 ரன்கள் பின் தங்கிய நிலையில் பாலோ அனை ஏற்று தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கி விளையாடியது.

இரண்டாம் இன்னிங்ஸிலும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் காட்ட வெஸ்ட் இன்டீஸ் பேட்ஸ்மேன்கள் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். இந்நிலையில் தற்போது இரண்டாம் இன்னிங்ஸிலும் 196 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளனர். இதனால் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 276 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றுள்ளது. இந்தியா பெற்றுள்ள மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.

இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்களும் ஜடேஜா 3 விக்கெட்களும் வீழ்த்தி அசத்தியுள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :