புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 7 அக்டோபர் 2018 (20:03 IST)

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் - சாம்பியன்ஷிப்பை கைப்பற்றிய இந்தியா

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா சாம்பியன்ஷிப் பட்டத்திக் கைப்பற்றியுள்ளது.

 

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் டாக்காவில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி அடுத்தடுத்து அவுட்டாகி 38.4 ஓவர்களில் 160 ரன்னில் சுருண்டது.

இதனால் இந்திய அணி 144 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.