செவ்வாய், 22 ஏப்ரல் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 15 ஏப்ரல் 2025 (17:35 IST)

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

இந்தியா வம்சாவளியை சேர்ந்த பெண் நீலா ராஜேந்திரன், நாசாவில் முக்கிய பொறுப்பில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், அவர் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவி ஏற்றதிலிருந்து, பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, தேவையற்ற செலவுகளை குறைக்கவும், நிர்வாகத்தை சீர்படுத்தவும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
 
மேலும், எலான் மஸ்க் தலைமையிலான குழுவொன்றை நிர்வாகத்தை சீர்படுத்தும் நோக்கில் ட்ரம்ப் அரசு அமைத்துள்ளது. அந்த குழுவின் பரிந்துரைப்படி சில துறைகள் மூடப்பட்டன, மேலும் பல அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த சூழலில், நாசாவில் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் சார்ந்த துறையில் பதவியிலிருந்த இந்திய வம்சாவளியையுடைய நீலா ராஜேந்திரன், பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த துறையை எலான் மஸ்க் குழு ரத்து செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
இதனை அடுத்து, நீலா ராஜேந்திரன் தனது பதவியை பாதுகாக்க முயன்றதாகவும், அதற்காக அவர் தனது துறையை Head of Office of Team Excellence and Employee Success என மாற்றியதாகவும் தெரிகிறது. ஆனால் ட்ரம்ப் நிர்வாகம் இந்த மாற்றத்தை ஏற்க மறுத்ததால், நாசா இவரது பணி நீக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று இமெயில் மூலம் அறிவித்துள்ளது.
 
இதனால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிலா ராஜேந்திரன் பணி நீக்கம் செய்யப்பட்டு விட்டது உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran