இந்தியாவுக்கு 75 லட்சம் மாடர்னா தடுப்பூசிகள்! – கோவேக்ஸ் திட்டத்தில் அறிவிப்பு!
உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் இந்தியாவிற்கு 75 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ள நிலையில் தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வல்லரசு நாடுகளிடமிருந்து கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் தடுப்பூசிகளை பெற்று மற்ற நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு வழங்கி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசிகள் 75 லட்சம் டோஸ் இந்தியாவிற்கு வழங்கப்பட உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசிக்கு சமீபத்தில் இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.