ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 21 ஜூலை 2021 (10:08 IST)

மீண்டும் தமிழில் கவனம் செலுத்தும் சந்தீப் கிஷன்… இயக்குனர் இவர்தானாம்!

நடிகர் சந்தீப் கிஷன் தமிழில் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

தெலுங்கு படங்களில் முன்னணிக் கதாநாயகனாக இருப்பவர் சந்தீப் கிஷன்.மேலும் இவர் தமிழிலும் யாருடா மகேஷ், மாயவன், மாநகரம் மற்றும் நெஞ்சில் துணிவிருந்தால் ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர். ஆனால் தமிழ் படங்களை விட தெலுங்கு படங்களில் நடிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் இப்போது சந்தீப் கிஷன் மீண்டும் தமிழில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை விஜய் சேதுபதியின் புரியாத புதிர் படத்தை இயக்கிய இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கோடி இயக்க உள்ளாராம். அதற்கான முன் தயாரிப்பு பணிகளை இப்போது இயக்குனர் மேற்கொண்டு வருகிறாராம்.