1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 21 ஜூலை 2021 (10:03 IST)

ஆர் ஜே பாலாஜி சொன்ன சம்பளம்!… எதுவும் சொல்லாமல் திரும்பி சென்ற தயாரிப்பாளர்!

ஆர் ஜே பாலாஜி நடிப்பில் உருவான படங்கள் வெற்றி பெற்றதால் அவருக்கென்று தனியாக மார்க்கெட் உருவாகியுள்ளது.

ஆர் ஜே வாக இருந்த தமிழ் சினிமாக்களை பங்கமாக கலாய்த்து விமர்சனங்கள் செய்தவர் ஆர் ஜே பாலாஜி. அதன் பின்னர் அவரே தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி கவனத்தை ஈர்த்தார். பின்னர் அவர் கதாநாயகனாக நடித்த எல் கே ஜி மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய படங்கள் வெற்றி பெற்றன.

இதனால் இப்போது அவரைக் கதாநாயகனாக வைத்து சில படங்கள் உருவாகி வருகின்றன. இதனால் தமிழின் முன்னணி தயாரிப்பாளரான சங்கிலி முருகன் அவரை வைத்து ஒரு படம் எடுக்கலாம் என அணுகிய போது அவர் 6 கோடி சம்பளம் கேட்டு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளாராம். இதனால் சங்கிலி முருகன் அந்த படமே வேண்டாம் என முடிவு செய்து கைவிட்டு விட்டதாக சொல்லப்படுகிறது.