1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. If Ranil become PM, I will resign says Sirisena

ரணில் மீண்டும் பிரதமரானால்? அதிபர் சிறிசேனா எச்சரிக்கை

இலங்கை
இலங்கையில் பதவிநீக்கம் செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமர் ஆனால் ஒருமணி நேரம் கூட அதிபர் பதவியில் நீட்டிக்க மாட்டேன் என இலங்கை அதிபர் சிறிசேனா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பில் அதிபர் சிறிசேனா தலையில் நடைபெற்ற இலங்கை சுதந்திர கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் 'புதிய அரசின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு, சுதந்திரக் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும், ரணில் மீண்டும் பிரதமர் ஆனால் தான் ஒரு நிமிடம் கூட அதிபர் பதவியில் நீடிக்க மாட்டேன்' என்றும் கூறினார்.

அதிபர் சிறிசேனாவின் கருத்தை வரவேற்ற கட்சி நிர்வாகிகள்,  புதிய அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்தனர். இந்த நிலையில் ராஜபக்சேவுக்கு எம்பிக்கள் ஆதரவு அதிகரித்து வருவதால் அவர் தனது மெஜாரிட்டியை நிரூபித்துவிடுவார் என்றே இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
அடுத்த கட்டுரையில்
ஒரு வழியாக துவங்கிய வடகிழக்கு பருவமழை: ஹேப்பியான மக்கள்