திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 1 நவம்பர் 2018 (07:54 IST)

மோடியின் அப்பாவோ, தாத்தாவோ வந்தாலும் இதை செய்ய முடியாது: முதல்வர் ஆவேச பேச்சு

நேற்று நாடு முழுவதும் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில் புதுவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் நாராயணசாமி,  பா.ஜனதாவை நாட்டைவிட்டே விரட்ட வேண்டும் என்றும், அப்போதுதான் நாடு முன்னேறும் என்றும் காங்கிரஸ் இல்லாத இந்தியாவை பிரதமர் மோடி மட்டுமின்றி அவருடைய அப்பாவோ, தாத்தாவோ வந்தாலும் முடியாது என்றும் ஆவேசமாக பேசினார். இந்த நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது:

நாட்டுக்காக உயிர் கொடுத்த தியாக தலைவி இந்திராகாந்தி. அவர் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தினார். அதேபோல ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியை நாமும் வலுப்படுத்த வேண்டும். நாட்டுக்காக வேறு எந்த கட்சியினராவது ரத்தம் சிந்தியது உண்டா? ராகுல்காந்தி நாடு முழுவதும் பயணம் செய்து கட்சியை வலுப்படுத்தி வருகிறார். அவரின் கரத்தை நாமும் வலுப்படுத்த வேண்டும். காங்கிரசாரை பொறுத்தவரை கட்சி இரண்டாம்பட்சம்தான். நாடுதான் முக்கியம்.

காங்கிரஸ் ஆட்சியில் நாடு முழுவதும் காங்கிரசாரை கவர்னராக நியமிப்பதாக பா.ஜனதா பொய் பிரச்சாரம் செய்தது. ஆனால் இன்று ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்தான் கவர்னர்களாக உள்ளனர். மத்திய அரசு நிர்வாகத்தையே ஆர்.எஸ்.எஸ்.தான் நடத்துகிறது. பா.ஜனதாவை நாட்டை விட்டே விரட்ட வேண்டும். அப்போதுதான் நாடு முன்னேறும்.

பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று கூறுகிறார். இதை அவருடடஇய அப்பாவோ, தாத்தாவோ வந்தாலும் இதை செய்ய முடியாது. காங்கிரஸ் கட்சியை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. காங்கிரஸ் ஒரு பீனிக்ஸ் பறவை. அது மீண்டும், மீண்டும் எழும். ராகுல்காந்தியை பிரதமராக்கும் தேர்தல் 2019(ல் வருகிறது. அதற்கு காங்கிரசார் இரவு, பகலாக ஒற்றுமையோடு பாடுபட வேண்டும்.