திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 29 அக்டோபர் 2018 (13:08 IST)

எப்படியோ...? இலங்கையின் ஆட்சியை பிடித்தார் ராஜபக்‌ஷே!!!!!

இன்னும் சற்று நேரத்தில் இலங்கையில் மஹிந்த ராஜபக்‌ஷே தலைமையிலான புதிய அமைச்சரவை பொறுப்பேற்கவுள்ளதாக செய்திகள் வெளியாவதால் இலங்கையில் பரபரப்பு நீடிக்கிறது.
அதிபர் சிரிசேனா முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ராஜபக்‌ஷே பதவியேற்ற நிலையில் பிரதமர் அலுவலக பொறுப்புகளை இன்று  கவனிக்க தொடங்கினார் ராஜபக்‌ஷே.
 
இதற்கு முன் பிரதமர் ராஜபக்‌ஷேவிற்கு உற்சாக வரவேற்பளித்தனர் பிரதமர் அலுவலக அதிகாரிகள்.
 
அரசியல் குழப்பம் நீடித்துவரும் சூழ்நிலையில் ரணில் விக்ரமசிங்கே தன்னை பதவியில் இருந்து நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என கூறியிருந்தார்.இந்நிலையில் நேற்று கரூ ஜெயசூர்யா ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக பதவி வகிப்பார் என்று  அங்கீகாரம் அளித்திருந்த  நிலையில் இப்போது ராஜபக்‌ஷே கொள்ளைப்புரம் வழியாக பதவியைப் பிடித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.