விண்வெளியிலிருந்து வந்த சிக்னல்!.. ஏலியன் அனுப்பியதா?!.. ஆய்வில் பரபரப்பு!..
வேற்று கிரகவாசிகள் என அழைக்கப்படும் ஏலியன் பற்றிய செய்திகள் எப்போதுமே மனிதர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடியது. ஏனெனில், நம்மைப் போல மற்றொரு கோளில் வேறு உயிரினங்கள் வாழ்கிறதா என்கிற கேள்வி எப்பொழுதுமே சுவாரசியம்தான்.
ஹாலிவுட்டில் தொடர்ந்து ஏலியன்ஸ் தொடர்பான திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு கல்லா கட்டி வருகிறார்கள். ஒருபக்கம் அறிவியல் அறிஞர்கள் ஏலியன்கள் இருக்கிறதா என கடந்த பல வருடங்களாகவே ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.
ஏலியன்கள் இருந்தால் அதிடமிருந்து சிக்னலை பெறும் முயற்சியில் அவர்கள் பல வருடங்களாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்தான் பூமியில் இருந்து 63 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள BERA PICTORIS B என்ற கோளிலிருந்து முதல்முறையாக விசித்திரமான சிக்னல் வந்திருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்..
தென்னாபிரிக்காவில் சக்தி வாய்ந்த MEERKAT RADIO TELESCOPE-ஐ பயன்படுத்தி ஆய்வாளர்கள் இதை சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள். இது ஏலியன்களால் ஏற்படவில்லை என்றும் பூமியை விட 2500 மடங்கு அதிக காந்தப்புலம் இக்கோளிலிருந்து வெளியிடப்பட்டதால் சிக்னல் வந்திருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள். ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.