புது வீடு.. கடன்.. கதறி அழுத மீனாட்சி!.. கொள்ளையடித்த நிஷாந்த்.. விசாரணையில் தகவல்...
மதுரையில் பைபாஸ் சாலையிலுள்ள தனிஷ்க் நகைக்கடையில் 10 கிலோவுக்கு மேற்பட்ட நகைகளும் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசாரின் விசாரணையில் பிரபல யுடியூபர் மற்றும் இன்ஃபுளூயன்சர் மீனாட்சிக்கு இதில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சிசிடிவி கேமரா மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் மீனாட்சியின் ஆண் நண்பர் நிஷாந்த் இந்த கொள்ளையில்ல் ஈடுபட்டது தெரியவந்தது. மீனாட்சியிடம் விசாரணை நடத்தப்பட்டு தற்போது 5 கிலோ நகைகளை போலீசார் மீட்டுள்ளனர்.
இந்நிலையில்தான், போலீசாரின் விசாரணையில் சில முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன. தோழியின் ஆசையை நிறைவேற்றுவதற்காகவே நிஷாந்த் நகைகளை கொள்ளை அடித்தது விசாரணையில் அம்பலமாகியிருக்கிறது. மீனாட்சி புதிய வீடு கட்டி வரும் நிலையில் அதிகளவு பணம் தேவைப்பட்டதாலும், அவருக்கு கடன்கள் இருந்ததாலும் இது பற்றி நிஷாந்திரன் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
இதையடுத்தே பணத்திற்காக நகைக்கடையில் கொள்ளையடிக்க இருவரும் திட்டமிட்டுள்ளனர். அதன்படி கொள்ளையடிக்க உதவியாக தனது பைக்கையும் நிஷாந்துக்கு மீனாட்சி கொடுத்துள்ளார். போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள். தனிப்படை அமைக்கப்பட்டு நிஷாந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்..