சிக்கிய இன்ஃப்ளூயன்சர்.. காட்டிக்கொடுத்த டாட்டூ!.. நிஷாந்தை நெருங்கும் போலீஸ்!..
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மீனாட்சி என்கிற யுடியூபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அவரின் காதலர் என சொல்லப்படும் நிஷாந்த் என்பவர்தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்திருக்கிறது.
சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து நிஷாந்த் கையில் இருந்த டாட்டூ மூலம் அவர்தான் நகைகளை கொள்ளையடிப்பது போலீசார் கண்டுபிடித்துள்ளனர். தற்போது மீனாட்சி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
கடைக்கு கஸ்டமர் போல கையில் கட்டுடன் வந்த சிசிடிவி காட்சி, தொப்பி அணிந்து வந்த காட்சி, கொள்ளையின்போது முகமூடி அணிந்திருந்த காட்சி என பல சிசிடிவி காட்சிகளை ஒப்பிட்டு பார்த்தபோது ஒரே டாட்டூ மூலம் போலீசார் நிஷாந்தை அடையாளம் கொண்டுள்ளனர்.. தற்போது அவர் தலைமறைவாகிவிட்டார்.
நிஷாந்தை கைது செய்ய நான்காவது நாளாக தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. செல்போன் நெட்வொர்க் மூலம் நிஷாந்தை போலீசார் நெருங்கிவிட்டனர். காவல்துறை தேடுவது அறிந்த நிஷாந்த் இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பதாக சொல்லப்படுகிறது. சேலம், கோவை, ஹைதராபாத், பெங்களூரு, கேரளாவிலும் தேடுதல் வேட்டை நடக்கிறது.
9 தனிப்படைகள் அமைத்து நிஷாந்தை தேடும் பணியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே நிஷாந்தின் தந்தை சுரேஷ் மற்றும் மீனாட்சி கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 5 கிலோவுக்கும் மேலான நகையும் மீட்கப்பட்டுள்ளன.