மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை!.. யார் இந்த மீனாட்சி நாச்சியார்?..
மதுரை தனிஷ்க் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரபல யுடியூபர் மீனாட்சி கைது செய்யப்பட்ட சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏனெனில், இந்த வழக்கில் இப்படி ஒரு டிவிஸ்ட் வரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
நகைக் கடையில் கொள்ளையடித்த நிஷாந்த் மீனாட்சியின் காதலராக இருக்கலாம் எனவும் சிசிடிவி, செல்போன் பற்றிய நிறைய விஷயங்களை மீனாட்சி தெரிந்து வைத்திருந்ததால் அவரின் வழிகாட்டுதலின் பெயரிலேயே நிஷாந்த் கொள்ளையடித்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
ஏற்கனவே மீனாட்சி காட்டிய இடத்தில் 5 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த மீனாட்சி யார் என தெரிந்து கொள்வோம்..
TECHBOSS என்ற youtube சேனலில் தொழில்நுட்பம் தொடர்பான வீடியோக்களை பேசி பிரபலமானவர்தான் இந்த மீனாட்சி நாச்சியார். இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருக்கும் இவர் விளம்பர புரமோஷன் வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.
இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு நிறைய ஃபாலோயர்ஸ்களும் உள்ளனர். வலிமை பட பாணியில் திட்டமிட்டு அவரின் காதலர் நிஷாந்த் முகமுடியுடன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்திருக்கிறது. தலைமறைவாகவுள்ள நிஷாந்தை போலீசார் விரைவில் கைது செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.