திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (19:43 IST)

மனிதர்கள் செய்ய முடியாததை மழை செய்தது! அமேசான் காட்டில் பயங்கர மழை

உலகிற்கே 20% மழை கொடுக்கும் அமேசான் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி லட்சக்கணக்கான மரங்களும் விலங்கினங்களும் தீயில் கருகிய நிலையில் இன்று அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கொட்டி தீர்ந்த மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
 
அமேசான் மழைக்காடுகளில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் பிரேசில்,  பராகுவே, பெரு, கனடா உள்ளிட்ட நாடுகளின் வீரர்கள் தீயணைப்பு வாகனங்கள் கடந்த சில நாட்களாக பெரும் முயற்சி செய்தனர். மேலும் ஹெலிகாப்டர் மற்றும் ராணுவத்துக்கு சொந்தமான விமானங்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு தீயை அணைக்கவும் முயற்சிகள் செய்யப்பட்டது
 
 
ஆனால் அமேசான் காட்டி பல ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுக்கு தீ பரவியதால் தீயை கட்டுப்படுத்துவது தீயணைப்பு வீரர்களுக்கு சவாலான விஷயமாக இருந்தது. அமேசான் காட்டில் இருந்த பல அரிய மரங்கள் மற்றும் உயிரினங்கள் தங்கள் கண்முன்னே தீயில் கருகியதை தீயணைப்பு வீரர்களால் வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது
 
 
இந்த நிலையில் மனிதர்களால் அணைக்க முடியாத தீயை அணைக்கும் விதமாக மழை பெய்ய வேண்டும் என பிரார்த்தனைகாள் செய்யப்பட்டன. இந்த பிரார்த்தனை பலிக்கும் வகையில் இன்று அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் தீ மேலும் பரவுவது தடுக்கப்பட்டு, இதமான சூழல் நிலவியது. இதனால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.