செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 5 செப்டம்பர் 2019 (09:12 IST)

பெரியார் சிலைக்கு கீழுள்ள ’அந்த’ வாசகம் – சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் சிலைகளுக்குக் கீழே உள்ள வாசங்களை நீக்க வேண்டுமெனெ சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சமூக சீர்திருத்தவாதியான தந்தை பெரியாருக்கு ஆயிரக்கணக்கான சிலைகள் உள்ளன. அவற்றில் பல சிலைகளில் ‘கடவுள் இல்லை, கடவுளை வணங்குபவர் காட்டுமிராண்டி, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் பெரியார் இந்த வாசகத்தை எப்போதும் கூறியதில்லை எனவும் அதனால் அவற்றை நீக்கவேண்டும் எனவும் தெய்வநாயகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றபோது திராவிடர் கழக தலைவர் வீரமணி பெரியார் உயிரோடு இருந்தபோதே தனது சிலையைத் திறந்து வைத்த சிலப் புகைப்படங்களை ஆதாரமாக சமர்ப்பித்தார். அவற்றில் பலவற்றில் இந்த வாக்கியம் உள்ளதாக அவர்தரப்பில் வாதாடப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள் இந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.