பசு மாட்டின் உடலில் வெடிகுண்டு ... தீவிரவாதிகள் அட்டூழியம்

iraq
Last Updated: வியாழன், 5 செப்டம்பர் 2019 (19:11 IST)
ஈராக் நாட்டில் தீவிரவாதிக்களுக்கும் அந்த நாட்டு ராணுவத்திற்கும் இடையே நீண்டகாலமாக போர் நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில் பசுக்கள் உடலில் வெடிகுண்டுகளை கட்டி பொதுஇடத்தில் வெடிக்கச் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக் நாட்டில் தீவிரவாதிகளான  ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரின்  அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கடந்த 2003 ஆம் ஆண்டிலிருந்து அந்த நாட்டு ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே போர் நடைபெற்றுவருகிறது. அங்கிருந்த அமெரிக்க படைகளை கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்க அரசு திரும்பப்பெற்று  வருகிறது.

இந்நிலையில் தாலிபான்கள் இராக் நாட்டை பிடிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்காவும் தாலிபான்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியது ஆனால் இந்த பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என தெரிகிறது.

 
இந்நிலையில்  கடந்த சனிக்கிழமை அன்று, தீவிரவாதிகள் பசுமாட்டின் உடலில் வெடிகுண்டுகளை கட்டி அனுப்பிவைத்தனர். இதில் பசுமாடுகள் வெடித்துச் சிதறியது. இந்த தாக்குதலில் அங்குள்ள வீடுகள் சேதமடைந்தன. ஆனால் மனிதர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என தெரியவந்ததுள்ளது.
 
தீவிரவாதிகளின் எண்ணிக்கை குறைந்து போனதால் அவர்கள் தங்கள் ஆட்களின் பற்றாக்குறையை தீர்க்கவேண்டி பசுக்களை தீவிரவாத செயல்களுக்கு ஈடுபடுத்திவருவதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இதில் மேலும் படிக்கவும் :