செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 5 செப்டம்பர் 2019 (13:05 IST)

ஜீப்புக்கு தீ வைக்கும் வைரல் வீடியோ… போலீஸில் கைதான உரிமையாளர்

குஜராத்தில் ஜீப்புக்கு ஒருவர் தீ வைத்து கொளுத்திய டிக் டாக் வீடியோ வைரலாகிய நிலையில் அந்த ஜீப்பின் உரிமையாளரை போலீஸார் கைது செய்துள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த இந்திரஜித் சிங் ஜடேஜா மற்றும் அவரது நண்பர் நிமேஷ் கோயல் ஆகியோர் ஜீப்பில் சென்றுகொண்டிருந்தபோது அந்த ஜீப் என்ஜின் கோளாறு காரணமாக சாலையின் நடுவே நின்றது. பின்பு பல முறை முயற்சி செய்து பார்த்தும் ஜீப் ஸ்டார்ட் ஆகவில்லை. ஆதலால் எரிச்சல் அடைந்த ஜீப் உரிமையாளர் இந்திரஜித் அந்த ஜீப்பிற்கு தீ வைத்து கொளுத்தினார். இதனை அவரது நண்பர் நிமேஷ் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்தார். அந்த வீடியோவுடன் பஞ்சாபி பாடல் ஒன்றை இணைத்து டிக் டாக்கில் பகிர்ந்தனர். அந்த வீடியோ வைரலாகி வந்தது.

இந்நிலையில் இந்த வீடியோ போலீஸாரின் கவனத்திற்கு செல்ல, போலீஸார் இந்திரஜித் மற்றும் அவரது நண்பர் நிமேஷ் ஆகியோரின் மீது பொதுமக்களின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதாக வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தற்போது விசாரணைக்கு பின் ஜாமீனில் வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது.

Source Pehli Pass