திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 28 ஜூன் 2022 (12:00 IST)

ஜப்பானில் வரலாறு காணாத தொடர் மின்வெட்டு: பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள்!

japan powercut
ஜப்பானில் வரலாறு காணாத தொடர் மின்வெட்டு: பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள்!
ஜப்பானில் வரலாறு காணாத வகையில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்நாட்டு பொதுமக்களுக்கு ஜப்பான் அரசு முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. 
 
ஜப்பான் நாட்டு மக்கள் இதுவரை மின்வெட்டு என்றால் என்ன என்பதை அறிந்திராத நிலையில் தற்போது மிகப்பெரிய தொடர் மின்வெட்டை சந்தித்து வருகின்றனர் 
 
ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் சுனாமி போன்றவற்றால் அணு மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
மின்சார நெருக்கடியில் ஜப்பான் நாட்டு மக்கள் சிக்கித் தவிப்பதால் ஜப்பான் மக்கள் மிக சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும் என அந்நாட்டு அரசு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது
 
தாராளமாக மின்சாரத்தை பயன்படுத்தி வழக்கமாகிவிட்ட ஜப்பான் மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவார்களா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.