1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 26 ஜூன் 2022 (09:44 IST)

டீ குடிக்காதீங்க.. லெஸ்ஸி, சர்பத் குடிங்க! – பாகிஸ்தான் அரசு அறிவுறுத்தல்!

Tea
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் தேநீருக்கு பதிலாக லெஸ்சி குடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானிலும் அந்நிய செலவாணி இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதில் சிக்கல்கள் நிலவி வருகிறது. மேலும் பாகிஸ்தான் முழுவதும் மின் பற்றாக்குறையும் ஏற்பட்டு வருகிறது.

முக்கியமாக பாகிஸ்தானுக்கு தேவையான தேநீர் பொடிகள் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக தேநீர் பொடிகள் அதிகளவில் இறக்குமதி செய்யமுடியாது என்பதால் தேநீர் குடிப்பதை குறைத்துக் கொள்ளுமாறு ஏற்கனவே பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் உயர்கல்வி ஆணையம், பாகிஸ்தான் மக்களை தேநீருக்கு பதிலாக லெஸ்சி, சர்பத் போன்ற குளிர்பானங்களை குடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும் தேயிலை இறக்குமதி குறைவால் தேநீர் விலையும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.