1. செய்திகள்
  2. வேலை வழிகாட்டி
  3. வாய்ப்புகள்
  4. job opportunities for retired sbi staff

SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு!. 257 காலியிடங்கள்!...

sbi
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது.. மொத்தம் 257  காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.. என்ன வேலை? எப்படி விண்ணப்பிப்பது? என்ன சம்பளம்? என்கிற விபரங்களை தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்..

இந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் முதன்மையானது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா.  இந்த வங்கியில் பணிபுரிய பலரும் ஆசைப்படுவார்கள்.. இந்நிலையில்தான், இந்த வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் அதே வங்கியில் வேலை கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஆலோசகர்கள் மற்றும் இயக்குனர்கள் இரண்டு பிரிவுகளில் பணிக்கு நபர்களை எஎடுக்கிறார்கள்..

வருகிற 5ம் தேதி முதல் 27ஆம் தேதி  வரை இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். SBI வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்..

FLC  ஆலோசகர் - 246 பணியிடங்கள்

FLC இயக்குனர்கள் - 11 பணியிடங்கள்

மாத சம்பளம் - 50 ஆயிரம் வரை..

பொதுப்பிரிவில் 115 பேர், ஓபிசி - 75 பேர், SC - 29, ST - 14, EWS- 15 என பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 31.01.2006 தேதியின்படி 60 வயது முதல் 63 வயது வரை இருக்க வேண்டும். 01.02.1963 தேதிக்கு முன்னரும், 30.01.1966-க்கு பின்னரும் பிறந்தவராக இருக்கக் கூடாது.

அனுபவம்: பொதுத்துறை வங்கி அல்லது வட்டார கிராம வங்கி என ஏதேனும் ஒன்றில் Scale I  முதல் Scale IV  வரை பணி செய்தவராக இருக்க வேண்டும். ஸ்மார்ட்போன் மற்றும் கம்ப்யூட்டர் இயக்க தெரிந்திருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் ஒரு வருடம் முதல் அதிகப்படியாக மூன்று வருடங்கள் வரை பணி நியமனம் செய்யப்படுவார்கள்..

சம்பளம்: எந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்களோ அதன் அடிப்படையில் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படும். குறைந்தபட்சம் 30 ஆயிரம் முதல் அதிகபட்சம் 50 ஆயிரம் வரை ஊதியம் கொடுக்கப்படும்..

விண்ணப்பிப்பவர்களின் கல்வித்தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள். இதுபற்றிய விபரம் அவர்களுக்கு இமெயில் மூலம் தெரிவிக்கப்படும்..

இந்த பணியில் சேர விரும்புபவர்கள் https://sbi.bank.in/ என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
புதிய கட்சியா? அல்லது தவெகவில் இணைகிறீர்களா? செய்தியாளர் கேள்விக்கு எந்த ஓபிஎஸ் என ஓபிஎஸ் பதில்