வெள்ளி, 6 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 6 பிப்ரவரி 2026 (12:17 IST)

திருமணமான பெண்ணை மறுதிருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் உறவு கொண்டால் அது குற்றமல்ல: உச்சநீதிமன்றம்

திருமணமான பெண்ணை மறுதிருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் உறவு கொண்டால் அது குற்றமல்ல: உச்சநீதிமன்றம்
திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், இது குற்றச்செயல் அல்ல, மாறாக ஒரு கசப்பான தனிப்பட்ட உறவு என்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. 
 
நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் பூயன் அடங்கிய அமர்வு, ஒரு பெண் ஏற்கனவே சட்டப்பூர்வமாக திருமணமானவராக இருக்கும்போது, மற்றொருவர் திருமணம் செய்துகொள்வதாக கொடுத்த வாக்குறுதியை நம்பி ஏமாந்ததாக கூற முடியாது என்று சுட்டிக்காட்டியது.
 
இந்த வழக்கில் புகார் அளித்தவர் 33 வயதுடைய ஒரு பெண் வழக்கறிஞர் ஆவார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அவர் மற்றொருவருடன் உடலுறவு கொண்டது ஒருமித்த கருத்தின் அடிப்படையிலானது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. 
 
முதிர்ச்சியடைந்த தனிநபர்களுக்கு இடையிலான உறவு கசக்கும்போது, அதை ஒரு குற்றமாக மாற்றி அரசை அதனுள் இழுக்கக் கூடாது" என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர். ஒரு வழக்கறிஞராக சட்டத்தின் நுணுக்கங்களை அறிந்த புகார்தாரர், ஏமாற்றப்பட்டதாக கூறுவதை ஏற்க முடியாது எனக்கூறி, சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, எஃப்.ஐ.ஆர்-ஐ உச்ச நீதிமன்றம் நீக்கியது.
 
Edited by Siva