கார்த்தி - விஜய்சேதுபதி நடிக்கும் படத்தின் டைட்டில் இதுவா?
கார்த்தி - விஜய்சேதுபதி நடிக்கும் படத்தின் டைட்டில் இதுவா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பேட்ட, தளபதி விஜயுடன் மாஸ்டர் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசனுடன் விக்ரம் ஆகிய படங்களில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி அடுத்ததாக கார்த்தி படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கார்த்தி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் இந்த படத்தை பிரபல இயக்குனர் ராஜுமுருகன் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கவுள்ளார் என்றும் கூறப்பட்டு வருகிறது
ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் முதல் தொடங்க இருப்பதாகவும் அடுத்த வருடம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிகிறது
மேலும் இந்த படத்திற்கு ஜப்பான் என்ற டைட்டில் வைக்க படக்குழுவினர் முடிவு செய்து இருப்பதாகவும் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது