1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. jayakumar talk to his rayapuram people

நான் என்ன தப்பு பண்ணேன்.. ஏன் கைவிட்டீங்க!. புலம்பும் ஜெயக்குமார்.

jayakumar
அதிமுக ஆட்சி காலங்களில் ஆக்டிவாக செயல்படுபவர் ஜெயக்குமார். இவர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது சபாநாயகராகவும் இருந்திருக்கிறார். பலமுறை அதிமுக எம்எல்ஏ மற்றும் அமைச்சராக இருந்திருக்கிறார். வட சென்னையில் ராயபுரம் தொகுதியில் 1991ம் வருடம் முதல் 2016 தேர்தல் வரை தொடர்ந்து வெற்றி பெற்றவர் ஜெயக்குமார்..

எடப்பாடி ஆட்சி காலத்தில் அவரின் குரலாக ஜெயக்குமார்தான் தினமும் செய்தியாளர்களை சந்திப்பார். எதிர்க்கட்சியான திமுக செல்லும் குற்றச்சாட்டுகளுக்கு ஜெயக்குமார்தான் செய்தியாளர்களிடம் பதிலடி கொடுப்பார். ஆனால் 2021 தேர்தலில் ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியில் தோல்வியடைந்தார். அதனால் எம்எல்ஏ பதவியை இழந்தார். அதன்பின் ஜெயக்குமாரை ஊடகங்களில் அதிகம் பார்க்க முடியவில்லை..

இந்நிலையில், வடசென்னையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெயக்குமார் ‘2021 தேர்தலில் என்னை ஏன் கைவிட்டீர்கள்?.. நான் என்ன தவறு செய்தேன்?.. கட்டப்பஞ்சாயத்து செய்தேனா இல்லை கள்ளச்சாராயம் காய்ச்சினேனா?.. அப்படி இருந்தால் நான் அரசியலை விட்டே போய்விடுகிறேன்.. ஜெயக்குமார் என்றைக்குமே அந்த மாதிரி கிடையாது.. உங்களை சுத்தி சுத்திதானே வந்தேன்.. நீங்கள் என்னையே தோற்கடித்து விட்டீர்கள்’ என்று பேசியிருக்கிறார்..
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு!. 257 காலியிடங்கள்!...