1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. edapadi palanisamy comment against stalin

ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.O இல்லை.. பூஜ்யம்தான்!. எடப்பாடி பழனிச்சாமி ராக்ஸ்!..

stalin
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எப்படியாவது ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என திமுக முடிவு செய்து அதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறது.. ஒருபக்கம் இந்த முறை நாம் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என அதிமுகவும் களத்தில் இறங்கி வேலை செய்து வருகிறது..

அதிமுக பாஜக தலைமையிலான பேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்திருக்கிறது. இந்த கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமக, டிடிவி தினகரன் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்திருக்கின்றன. ஒருபக்கம் திமுக வழக்கம் போல் தனது கூட்டணி கட்சிகளுடன் களத்தை சந்திக்க தயாராகி வருகிறது. இந்நிலையில்தான், முதல்வர் ஸ்டாலினை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்திருக்கிறார்..

களத்தில் வந்து ஸ்டாலின் ஓட்டு கேட்டால் அவருக்கு கிடைக்கப்போகுது 2.O இல்லை. பூஜியம்தான். 5 ஆண்டு கால ஆட்சியில் ஒரு சில மக்களின் நாக்கில் தேன் தடவியதை தவிர திமுக அரசு ஒன்றும் செய்யவில்லை. 5 ஆண்டுகளில் எந்த திட்டங்களையும் நிறைவேற்றாமல் மக்களுக்கு அல்வா கொடுத்திருக்கிறார் ஸ்டார்லின். 5 ஆண்டு காலத்தில் என்னென்ன திட்டங்களை செயல்படுத்தினீர்கள் என மக்களிடம் விவாதிக்க முடியுமா?...

மத்திய அரசு பொது நிதியை கொடுக்கவில்லை என சொல்லி மக்களுக்கு அல்வா கொடுக்கிறது திமுக. ரயில்வே திட்டங்கள் வரவில்லை என புளுக மூட்டைகளை திமுக அரசு அவிழ்த்துவிடுகிறது.களத்தில் எதிர்த்து நிற்கும் அரசியல் தலைவர்களை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின். தான் வகிக்கும் பதவிக்கு உள்ள கௌரவம், மரியாதை, தகுதியை முதல்வர் எண்ணிப் பார்க்க வேண்டும்.அதிமுக செயல்பாடுகளை திமுக கார்பன் காப்பி  அடித்து வருவது விலா நோக சிரிக்க வைக்கிறது’ என அவர் கூறியிருக்கிறார்.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
நான் என்ன தப்பு பண்ணேன்.. ஏன் கைவிட்டீங்க!. புலம்பும் ஜெயக்குமார்.