வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருட்டு: 17 செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கிய கூகுள்..!
வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடியதாக குற்றச்சாட்டு இழந்ததை அடுத்து 17 செயலிகளை ப்ளே ஸ்டோரில் இருந்து கூகுள் அதிரடியாக நீக்கி உள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுப்பதன் மூலம் அவர்களது தகவல்களை திருடி அதை விற்பனை செய்ததாக 17 செயலிகளை கூகுள் நிறுவனம் கண்டுபிடித்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட 17 செயலிகளை ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது
இந்த செயலிகள் வாடிக்கையாளர்களை உளவு பார்த்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் செல்போனில் இருக்கும் ஏராளமான தகவல்களை இந்த செயலிகள் திருடி முறைகேடாக பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. இவை பெரும்பாலும் கடன் அளிக்கும் நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசிய நாட்டு மக்களை குறிவைத்து இந்த நிறுவனங்கள் இயங்கியதாகவும் இதனை அடுத்து 17 செயலிகள் முற்றிலும் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட ஏஏ கிரெடிட், அமோர் கேஷ், ஈஸி கிரெடிட், காஷ்வாவ், கிரெடிபஸ், பிளாஷ்லோன், கோ கிரெடிடோ, பின்னப் லென்டிங், 4எஸ் கேஷ், ட்ரூநய்ரா, ஈஸி கேஷ் ஆகிய செயலிகளை ஏற்கனவே பதிவிறக்கம் செய்திருப்பவர்கள் அவர்கள் தாங்களாகவே அதை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Edited by Mahendran