வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 19 அக்டோபர் 2023 (17:09 IST)

14 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நோக்கியா !

Nokia
சில ஆண்டுகளாக பிரபல  முன்னணி நிறுவனங்கள் தங்கள்  நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருவதாக தகவல் வெளியானது.

எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பின்னர், அந்த நிறுவனத்தில் இருந்து பல ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

அதேபோல், கூகுள், பேஸ்புக், மைக்ரோசார்ப்ட்   உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்தும் இதேபோல ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில்  நேற்று மீண்டும் 45 பேரை பணி நீக்கம் செய்தது கூகுள் நிறுவனம்.

இந்த நிலையில்,  முன்னணி மொபைல் நிறுவனமான  நோக்கியா தனது  அமெரிக்கா அலுவலகத்தில் உள்ள 14 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக நோக்கியா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.