வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 7 டிசம்பர் 2023 (13:15 IST)

கூகுளின் அட்வான்ஸ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்.. மாயாஜாலம் செய்யும் ஜெமினி..!

கூகுள் நிறுவனம் ஏற்கனவே பேர்ட் என்னும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வைத்துள்ள நிலையில் அதன் அட்வான்ஸ் தொழில்நுட்பமான ஜெமினி என்ற ஏஐ தொழில்நுட்பம் அடுத்த மாதம் அறிமுகம் செய்யவுள்ளது.

ஜெமினி என்பது கட்டுரை உருவாக்க, மொழிகளை மொழிபெயர்க்க, பல்வேறு வகையான படைப்பு உள்ளடக்கங்களை எழுத, மற்றும் உலகின் பல தகவல்களை அறியவும் செயலாக்கவும் உதவும் ஒரு தொழில்நுட்பம் ஆகும்.

ஜெமினி தற்போது ஆரம்பக் கட்ட சோதனைகளில் உள்ளது, கூகுள் இதை 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் வணிக பயனர்களுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம்  மனிதனைப் போன்ற உரையை உருவாக்குவது மட்டுமின்றி வாடிக்கையாளர் சேவை, கல்வி மற்றும் பொழுதுபோக்கு போன்ற பல்வேறு பயன்பாடுகளில் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் இந்த தொழில்நுட்பத்திற்கு மொழிபெயர்க்கும் திறன் பெற்றிருப்பதால், இது பல்வேறு மொழிகளுக்கு இடையே துல்லியமான மற்றும் இயற்கையான மொழிபெயர்ப்புகளை வழங்க முடியும். மேலும் கவிதைகள், கதைகள், குறியீடு, ஸ்கிரிப்ட்கள், இசை கம்போஸ் செய்வது போன்ற பல்வேறு வகையான படைப்பு உள்ளடக்கங்களை உருவாக்க முடியும்.

Edited by Siva