1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. German train passengers stabbed 2 dead

ஜெர்மனி ரெயில் பயணிகள் மீது கத்திக் குத்து- 2 பேர் பலி

ஜெர்மனி
ஜெர்மனியில்  ரெயில் பயணிகள்  மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் 2 பஎர் பலியாகியுள்ளனர்.

ஜெர்மனி நாட்டின் வடக்கு பகுதில் பயணிகள் ரயில் சென்று கொண்டிருக்கும் போது, பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனி நாட்டில் ஹம்பர்க்-கீல் வழித்தடத்தில் பரோக்ஸ்டெட் என்ற ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தபோது, ஒரு மர்ம நபர் தாக்குதல் நடத்தினார்.

இந்த தாக்குதலில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பயணிகள் பலர் காயமடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த சம்பவத்தை அடுத்து, ஹம்பர்க் கீல் பகுதியில் ரயில் போக்குவரத்து  நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
நியூசிலாந்து புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்பு