வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 25 ஜனவரி 2023 (23:08 IST)

நியூசிலாந்து புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்பு

Chris Hipkins
நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 

நியூசிலாந்து  நாட்டின்  பிரதமராகப் பதவிவகித்து வந்த ஜெசிந்தா சமீபத்தில் நடந்த  ஆர்டன் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு, ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில், பிரதமர் பொறுப்பில் 5 வருடங்களுக்கு மேல் பணியாற்றிவிட்டதால், அப்பதவியில் இருந்து விலக முடிவெடுத்திருக்கிறேன். அதனால், வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி விலகுவதாகக் கூறியிருந்தார்.

இதையடுத்து, தொழிலாளர் கட்சி சார்பில் கல்வி அமைச்சராக இருந்த கிறிஸ் ஹிப்கின்ஸ் புதியபிரதமராக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

இந்த  நிலையில், இன்று  நியூசிலாந்தின் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்றுக் கொண்டார். இவர் அடுத்த 9 மாதங்கள் தான் இப்பதவியில் இருப்பார் என்றும், அதன் பின்னர்  பிரதமர் பதவிக்கான தேர்தல் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.