சீனாவில் பரவும் காய்ச்சல்....மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த அரசு முடிவு
சீனாவில் ஜி ஜின்பிங் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவின் வூவாங் மாகாணத்தில் இருந்து கொரொனா வைரஸ் தொற்றுப்பரவியதாக உலக நாடுகள் குற்றம்சாட்டின.
இந்தத் தொற்றினால், உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பல கோடிப்பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது உருமாறிய கொரொனா வைரஸ் அடுத்தடுத்த அலைகளாகப் பரவி வருகிறது.
இந்நிலையில், சீனாவில் மீண்டும் சீனாவில் கொரொனாவில் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இந்தக் காய்ச்சலால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனவே, இந்த நோய்த்தொற்றைத் தடுக்க சீனாவில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்க சீன அரசு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மீண்டும் ஊரடங்கு உத்தரவுகள் வரவுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.