வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (23:09 IST)

கனடா நாட்டில் 'டிக்டாக்' செயலிக்கு தடை

கனடா நாட்டில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் சில ஆண்டுகளுக்கு முன் டிக்டாக் என்ற செயலிக்கு தடை விதிக்கப்பட்டது.

ஒவ்வொரு நாடுகளாக சீனாவைச் சேர்ந்த டிக் டாக் செயலியை தடை செய்து வரும் நிலையில், தற்போது கனடா நாடும் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, இன்று முதல் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கனடாவில் உள்ள அரசு அலுவலகங்கள், மற்றும் அரசிற்குச் சொந்தமான செல்பபோன் உள்ளிட்ட தொழில் நுட்ப சாதனங்களில் டிக் டாக் செயலிக்கான தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

அதனால், யாரும் இதைப் பதிவிறக்கம் செய்யக் கூடாது என்றும், பயன்படுத்தினால், அந்தச் செயலி நீக்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.