1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (23:55 IST)

முதல்முறையாக யூடியூப் செய்த அதிரடி மாற்றம்

உலகின் நம்பர் ஒன் வீடியோ இணையதளமான கூகுளின் யூடியூப் இணையதளம் வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது வசதிகளை அள்ளி தந்து கொண்டிருக்கின்றது. யூடியூப் வீடியோ மூலம் மட்டுமே பலர் நிரந்தர வருமானம் பெற்று வருகின்றனர்.



 
 
இந்த நிலையில் யூடியூப் இணையதளம் முதன்முதலாக ஒரு அதிரடி மாற்றத்தை செய்துள்ளது. யூடியூப் இணையதளம் ஆரம்பித்து 12 வருடங்கள் முடிந்துள்ள நிலையில் முதல்முறையாக லோகோவை மாற்றியுள்ளது. மேலே உள்ள படத்தில் பழைய லோகோவும் புதிய லோகோவும் உள்ளது.
 
இந்த மாற்றம் மொபைல் மற்றும் டெக்ஸ்டாப் வெர்ஷன் ஆகிய இரண்டிலும் செய்துள்ளதாகவும், இந்த மாற்றத்தை யூடியூபின் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புவதாகவும் யூடியூப் அறிவித்துள்ளது