1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (15:18 IST)

மோடி குறித்த ஆவணப்படத்தை பிபிசி ஒளிபரப்பி இருக்கக்கூடாது: இங்கிலாந்து எம்பி கருத்து..!

bbc england
மோடி குறித்த ஆவணப்படத்தை பிபிசி ஒளிபரப்பி இருக்கக்கூடாது: இங்கிலாந்து எம்பி கருத்து..!
பிரதமர் மோடி குறித்த ஆவண திரைப்படத்தை பிபிசி ஒளிபரப்பு இருக்கக் கூடாது என இங்கிலாந்து எம்பி பாப் பிளாக்மேன் என்பவர் தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் பிபிசி வெளியிட்ட பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது என்பதும் இதனை அடுத்து பிபிசியின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் வருமானவரி துறையினர் சோதனை செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இங்கிலாந்து எம்பி பாப் ப்ளாக்மேன் என்பவர் கூறியபோது பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை பிபிசி  ஒருபோதும் ஒளிபரப்பு இருக்கக் கூடாது என்றும் அது உண்மைக்கு மாறாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
 
2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தின் போது அப்போதைய முதலமைச்சர் ஆக இருந்த மோடி அமைதியை நிலைநாட்ட முயற்சி செய்ததுதான் உண்மை என்றும் பிபிசி ஆவணப்படம் மிகவும் வருத்தத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார். 
 
மேலும் இந்தியா இங்கிலாந்து உறவை சீர்குலைக்கும் வகையில் அந்த ஆவணப்படம் இருப்பது மிகப்பெரிய அவமானம் என்று தான் நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran