செவ்வாய், 25 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 15 பிப்ரவரி 2023 (22:50 IST)

ஸ்காட்லாந்து முதல் மந்திரி நிகோலஸ் ஸ்டர்ஜன் ராஜினாமா

Brittan
பிரிட்டன் ஆளுகைக்கு உட்பட்ட ஸ்காட்லாந்தில் முதல் மந்திரி தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பிரிட்டனின் ஸ்காட்லாந்து மாநிலத்தின் முதல்வராகப் பதவி வகிப்பவர் நிகோலா ஸ்டர்ஜன். இவர், இந்த மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்ற சிறப்பைப் பெற்றவர் ஆவார்.

நீண்ட காலம் முதல்வராகப் பணியாற்றிய பெருமை கொண்ட இவர்,  ஆளுங்கட்சியான தேசிய கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் முதல்வர் இருந்தும் ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

நான் கடந்த 8 ஆண்டுகளாக ஸ்காட்லாந்து தேசிய கட்சிக்குத் தலைமை ஏற்றிறுந்தேன். இப்போது, இப்பதவியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளேன். நான் வேறு எந்தக் காரணத்திற்காகவும் பதவி விலகவில்லை.

அடுத்த தலைவரை தேர்வு செய்யும் வரை இப்பதவியில் இருப்பேன்.  அதேபோல், பாராளுமன்றத் தேர்தல் அடுத்து, 2026 ல்  வரும்வரை பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவியில் இருப்பேர்ன் எனத் தெரிவித்துள்ளார்.