வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 15 பிப்ரவரி 2023 (22:37 IST)

கனடாவில் மீண்டும் இந்துக் கோவில் மீது தாக்குதல்!

canada
கனடா நாட்டில் மிசிகாகாவில் உள்ள ராமர் கோவியில் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமான ஆஸ்திரேலியா உள்ள இந்துக் கோவில்களில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு இந்தியர்கள், அங்குள்ள அதிகாரிகளும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், கனடா நாட்டில் மிகிகாகா என்ற மாகாணத்தில் உள்ள ராமன் கோவிலில் இந்தியாவுக்கு எதிரானவர்களால் தாக்கப்பட்டுள்ளது.

இக்கோவியில் உள்ள பிரதமர் மோடி மற்றும் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது அங்குள்ள இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்திற்கு  இந்தியத் தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், கனடா நாட்டு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், கடந்த மாதம் பிராம்ப்டனில் உள்ள இந்துக் கோவிலில் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.