தொடர்புடைய செய்திகள்
- ரூ.9 லட்சம் கோடிக்கு சொந்தக்காரர் ரோட்டுக் கடையில் சாப்பிடுவது ஏன்?
- நான் மோடியின் ரசிகன், இந்தியாவுக்கு விரைவில் வருவேன்: எலான் மஸ்க்
- எலான் மஸ்கை சந்திக்கும் பிரதமர் மோடி
- ட்விட்டர் சி.இ.ஓ கூறுவது பொய், இந்திய சட்டத்தை அவர்கள் மதிக்கவில்லை: மத்திய அமைச்சர் பதிலடி..!
- ட்விட்டர் அலுவலகங்கள் மூடப்படும் என மோடி மிரட்டினார்: முன்னாள் சி.இ.ஓ குற்றச்சாட்டு..!
ட்விட்டர் பயனாளர்களுக்கு ஆப்பு வைத்த எலான் மஸ்க்..! ப்ளூ டிக் பயனாளிகளுக்கு மட்டுமே எல்லாம்..!
இனி ப்ளூ டிக் சந்தாதாரர்கள் மட்டுமே ட்விட்டரை முழுவதுமாக பயன்படுத்த முடியும் என்றும், அதற்கேற்ப புதிய கட்டுப்பாடுகளை எலான் மஸ்க் விதித்திருக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ட்விட்டரில் உள்ள ப்ளூ டிக் சந்தாதாரர்கள் ஒரு நாளைக்கு 6000 பதிவுகளைப் படிக்க முடியும். ட்விட்டரில் இருக்கும் மற்ற பயனாளர்கள் வெறும் 600 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும். புதிதாக ட்விட்டருக்கு வரும் unverified பயனாளர்கள் இனி ஒரு நாளைக்கு 300 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும் என்ற புதிய நிபந்தனையை எலான் மஸ்க் விதித்திருக்கிறார்.
ஆனால் இது ஒரு தற்காலிக முடிவு என எலான் மஸ்க் அறிவித்திருந்த நிலையில் கடந்த சில மணி நேரமாக ட்விட்டர் பயன்படுத்துவதில் சிரமம் இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எலான் மஸ்க் எடுத்துள்ள இந்த முடிவுக்கு டுவிட்டர் பயனர்கள் கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
Edited by Siva
