1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 21 ஜூன் 2023 (08:19 IST)

நான் மோடியின் ரசிகன், இந்தியாவுக்கு விரைவில் வருவேன்: எலான் மஸ்க்

modi -elan musk
நான் இந்திய பிரதமர் மோடிகளின் ரசிகர் என்றும் விரைவில் இந்தியாவுக்கு வருவேன் என்றும் உலகின் நம்பர் ஒன் தொழிலதிபர் எலான் மஸ்க்தெரிவித்துள்ளார். 
 
நியூயார்க்கில் பிரதமர் மோடியை சந்தித்த பின்னர் எலான் மஸ்க் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது இந்தியாவின் எதிர்காலம் குறித்து நான் ஆர்வத்துடன் உள்ளேன் என்றும் முதலீடுகளை செய்ய வருமாறு பிரதமர் மோடி என்னை அழைத்தார் என்றும் தெரிவித்தார். 
 
பிரதமர் மோடி புதிய நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்க விரும்புகிறார் என்றும் அடுத்த ஆண்டு மீண்டும் இந்தியாவுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளேன் என்றும் தெரிவித்தார். 
 
ஸ்டார்லிங்க் நிறுவனத்தை இந்தியாவுக்கு கொண்டு வர ஆவலுடன் காத்திருக்கிறோம் என்றும் அவர்  பிரதமர் மோடி சரியான முறையில் இந்தியாவுக்கு பணியாற்றி வருகிறார் என்றும் இந்தியாவில் பெரிய முதலீடுகளை செய்ய தூண்டுதலாக இருக்கிறார் என்றும் நான் மோடியை மிகவும் ரசிக்கிறேன் என்றும் தெரிவித்தார்.
 
Edited by Siva