1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Indian-American Vivek Ramaswamy Defeated in Ohio Governor Race During US Midterm Elections

அமெரிக்க இடைக்கால தேர்தல்.. இந்திய வம்சாவழி விவேக் ராமசாமி அதிர்ச்சி தோல்வி...

Vivek Ramaswamy
அமெரிக்க இடைக்கால தேர்தலில் ஓஹியோ மாகாண ஆளுநர் பதவிக்கு போட்டியிட்ட இந்திய-அமெரிக்க தொழிலதிபரான விவேக் ராமசுவாமி அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளார். குடியரசு கட்சி வேட்பாளராக களமிறங்கிய 39 வயதான விவேக் ராமசுவாமி, ஜனநாயக கட்சி வேட்பாளர் ஏமி ஆக்டனிடம் வீழ்ந்தார்.
 
கடந்த ஆண்டு குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இருந்த இவர், பின்னர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு எலான் மஸ்க்குடன் இணைந்து அரசின் செயல்திறன் துறைக்கு தலைவராக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தோல்வி குறித்து பேசிய விவேக் ராமசுவாமி, "சில விஷயங்கள் காரணத்துடனேயே நடக்கின்றன. கடவுளின் திட்டப்படி நாம் இயங்குகிறோம், காலப்போக்கில் நமது நாட்டிற்கு சிறந்த நாட்கள் வரும்" எனக்குறிப்பிட்டார்.
 
இந்த இடைக்காலத் தேர்தலில் அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான குடியரசு கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. செனட் சபையில் தனது பெரும்பான்மையை இழந்துள்ள குடியரசு கட்சி, பிரதிநிதிகள் சபைத்தேர்தலிலும் தோல்வியின் விளிம்பில் உள்ளது. விவேக் ராமசுவாமியின் இந்த தோல்வி அமெரிக்க அரசியலில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
அமெரிக்க இடைக்கால தேர்தல்.. இந்திய-அமெரிக்க ஜனநாயக கட்சி வேட்பாளர் அமோக வெற்றி..