1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. trump lost the amercia senat sapai in the election

செனட் சபையை இழந்த டொனாட்ல் டிரம்ப் - 51 இடங்களை கைப்பற்றிய ஜனநாயக கட்சி

donald trump
அமெரிக்க நாடாளுமன்றத்தை கட்டுப்படுத்தும் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆளும் குடியரசு கட்சிக்கும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவிய. இந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறுகிறதோ அக்கட்சியே அமெரிக்க நாடாளுமன்றத்தை கட்டுப்படுத்த முடியும் என்பதால் இது முக்கியமான தேர்தலாக பார்க்கப்பட்டது.

கீழவையான பிரதிநிதிகள் சபையின் அனைத்து 435 இடங்களுக்கும், மேலவையான சபையில் மொத்தம் 100 இடங்களில் காலியாகும் 35 இடங்களுக்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், பதிவான வாக்குகள் இந்திய நேரப்படி இன்று அதிகாலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகிறது. இதில், டிரம்ப்பின் ஆளும் குடியரசு கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.

அமெரிக்க செனட் சபையில் 39 இடங்களை பெற்றுள்ள குடியரசுக் கட்சி பெரும்பான்மையை இழந்துவிட்டது. மொத்தமுள்ள 100 இடங்களில் 51 இடங்களை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியிருக்கிறது. அமெரிக்க செனட் சபைக்கு தேர்வாகும் உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 வருடங்கள் ஆகும். அமெரிக்காவின் செனட் சபை என்பது இந்தியாவின் மாநிலங்களவைக்கு ஒப்பானது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
அமெரிக்க இடைக்கால தேர்தல்.. இந்திய வம்சாவழி விவேக் ராமசாமி அதிர்ச்சி தோல்வி...